உழவரை தேடி வேளாண் முகாம்
ப.வேலுார், பரமத்தி வட்டாரம், பிள்ளைக்களத்துார் கிராமத்தில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில், 'உழவரை தேடி' வேளாண்மை- உழவர் நலத்துறை திட்ட முகாம் நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். இதில், முகாம் செயல்படுத்துவதன் நோக்கம், திட்டத்தின் பயன்கள், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் சிறப்புகள், பயன்பெறும் முறைகள் குறித்து விளக்கினார்.பரமத்தி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சின்னதுரை, தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். வேளாண்மை துறையின் வட்டார அலுவலர்கள் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.