உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அடிப்படை வசதி கேட்டுஅ.தி.மு.க., கவுன்சிலர் தர்ணா

அடிப்படை வசதி கேட்டுஅ.தி.மு.க., கவுன்சிலர் தர்ணா

வெண்ணந்துார்:வெண்ணந்துார் அருகே, அத்தனுார் டவுன் பஞ்.,ல், மொத்தம், 15 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க.,-12, அ.தி.மு.க.,-2, சுயேச்சை-1 என, மொத்தம், 15 கவுன்சிலர்கள் உள்ளனர். டவுன் பஞ்., தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த சின்னசாமி உள்ளார். நேற்று காலை, 11:30 மணிக்கு டவுன் பஞ்., கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, 5-வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் மாயக்கண்ணன், 'தெருவிளக்கு, சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என் வார்டில் நிறைவேற்றி தரவில்லை' எனக்கூறி, டவுன் பஞ்., நுழைவு வாயில் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் டவுன் பஞ்., அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ