மேலும் செய்திகள்
33 ஆண்டுகளுக்குப்பின் மாணவ-மாணவியர் சந்திப்பு
04-Aug-2025
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு பள்ளியில், முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.குமாரபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 2002-2003ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, மாணவியர் இறை வணக்கம் பாடி நிகழ்ச்சி தொடங்கியது. மாணவி உமா மகேஸ்வரி வரவேற்றார். கல்வி கற்பித்த ஆசிரியர், ஆசிரியைகள் தில்லைக்கரசி, பழனிச்சாமி, பன்னீர் செல்வம், சங்கர், வெற்றிவேல், உடற்கல்வி ஆசிரியர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசு வழங்கினர்.தொடர்ந்து, முன்னாள் மாணவ, மாணவியர் தாங்கள் பள்ளி பருவத்தில் நடந்த சுவாரசியமான அனுபவங்களை பரிமாறி மகிழ்ந்தனர். மேலும், தங்களது குடும்பத்தினரையும் அறிமுகப்படுத்தினர். வாழ்க்கை பாதையை உயர்த்திய ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். முன்னாள் மாணவர் ஜீவானந்தன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சங்கர், மணிகண்டன், உமாமகேஸ்வரி, செல்வகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.
04-Aug-2025