உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மது ஒழிப்பை வலியுறுத்தி பா.ம.க., மனித சங்கிலி

மது ஒழிப்பை வலியுறுத்தி பா.ம.க., மனித சங்கிலி

மது ஒழிப்பை வலியுறுத்திபா.ம.க., மனித சங்கிலிபள்ளிப்பாளையம், அக். 10-பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பா.ம.க., சார்பில் மது ஒழிப்பை வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு இயக்கம் நடந்தது. நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் உமாசங்கர் தலைமை வகித்தார். மனித சங்கிலி விழிப்புணர்வு இயக்கத்தில், குடும்பத்தை அளிக்கும் மது அரக்கனை ஒழிப்போம்; மனிதனாய் வாழ்வதற்கு போதை தரும் மதுவை ஒழித்துவிடு என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட தலைவர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை