உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல், அக். 27-தேசாய் அறக்கட்டளை, எஸ்.பி.எஸ்., அறக்கட்டளை, தொன்போஸ்கோ முன்னாள் மாணவர்கள், சலேசியா அட்சான் உறுப்பினர்கள் சார்பில், 'பால் ஹெல்த் மேளா', நாமக்கல் அடுத்து என்.புதுப்பட்டியில் உள்ள தொன்போஸ்கோ அன்பு இல்லத்தில் நடந்தது.தொன்போஸ்கோ அன்பு இல்ல இயக்குனர் பரத் ஜெயராஜ் தலைமை வகித்தார். என்.புதுப்பட்டி பஞ்., தலைவர் கவிதா, சஹானா பவுல்ட்ரி பார்சூன் நிறுவனர்கள் பிரான்சிஸ், ஜெப்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மொபைல் போன் பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு மனநலம் பாதிப்பு, கவன சிதறல், தனிமைப்படுத்திக்கொள்ளுதல், அடிமையாதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். அவற்றில் இருந்து விடுபடவும், மொபைல் போன் படுத்துவதில் இருந்து விலக்கி, விளையாட்டு மூலம் கவனத்தை திசை திருப்பி, நல்வழிப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆடல், பாடல் மூலம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. அதில், குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரங்கேற்றிய நாடகம், தத்ரூபமாக இருந்தது, பார்வையாளர்களை கவர்ந்தது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், என்.புதுப்பட்டி, எருமப்பட்டி, பீமநாயக்கன்பட்டி, வீரிப்பாளையம், கணபதிநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை