மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
05-Mar-2025
நாமக்கல்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்பட, காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 1993 மேற்பார்வையாளர் பணிக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மேற்பார்வையாளர் காலி பணியிடங்கள் இல்லையென்றால், சமூக நலத்துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.ஏற்கனவே ஏற்றுக்கொண்டபடி, மே மாதம் விடுமுறையை ஒரு மாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
05-Mar-2025