மேலும் செய்திகள்
வியாபாரி வீட்டில் பணம் திருடிய பணியாளர் கைது
12-Dec-2025
பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, கிட்னி புரோக்கர்கள் ஆனந்தன், ஸ்டான்லி மோகன் ஆகியோர் பணத்தாசை காட்டி, போலி ஆவணங்கள் தயார் செய்து, தொழிலாளர்களை கிட்னியை விற்க வைத்துள்ளனர். இதையடுத்து கடந்த ஜூலையில், சென்னை சுகாதாரத்துறை சட்டபிரிவு இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தலைமையில், நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ராஜ்மோகன் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், அன்றைய தினமே அன்னை சத்யா நகர் சென்று, கிட்னி விற்பனை செய்தவர்களிடம் விசாரணை செய்தனர். கிட்னி விவகாரம் வெளியே தெரிந்தவுடன், புரோக்கர்கள் தலைமறைவாகினர்.இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை, கிட்னி மோசடி வழக்குகளை தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், 4 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட விசாரணை குழு கடந்த ஆகஸ்டு மாதம் அமைக்க உத்தரவிட்டது. கடந்த அக்., 12ம் தேதி சிறப்பு புலனாய்வு குழுவினர், பள்ளிப்பாளையம் அடுத்த அன்னை சத்யா நகர் பகுதியில் பதுங்கி இருந்த கிட்னி புரோக்கர் ஆனந்தன், மோகன் இருவரையும் கைது செய்தனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில், கிட்னி திருட்டில் தொடர்புள்ள அன்னன சத்யா நகரை சேர்ந்த முத்துசாமி, ஈரோட்டை சேர்ந்த ஜோதீஸ்வரன் ஆகிய இரண்டு பேரையும் கடந்த மாதம் கைது செய்தனர்.இந்நிலையில், கிட்னி திருட்டு வழக்கில் தொடர்புள்ள ஈரோட்டை சேர்ந்த கார்த்திகேயன், 45, என்பவரை நேற்று சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
12-Dec-2025