உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மா.திறனாளி நேரடி கவுன்சிலர் பதவிக்கு பா.ஜ., சார்பில் மனு

மா.திறனாளி நேரடி கவுன்சிலர் பதவிக்கு பா.ஜ., சார்பில் மனு

ராசிபுரம், உள்ளாட்சி நிர்வாகத்தில், மாற்றுத்திறனாளி ஒருவரை நேரடியாக கவுன்சிலராக நியமிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் மனு செய்து வருகின்றனர். ஜூலை, 31 வரை மனு செய்யலாம். ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்சாயத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி உமாதேவி, வார்டு எண், 7ல் பா.ஜ., சார்பில் நேரடி கவுன்சிலர் பதவிக்காக மனு அளித்தார்.உடன் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணை தலைவர் லோகேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தமிழரசு, வள்ளி ராஜா, மாவட்ட துணை தலைவர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை