காடச்சநல்லுார் பஞ்.,க்கு செயலாளர் நியமனம்
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பஞ்., யூனியன் பி.டி.ஓ., பிரபாகரன்; இவரை கடந்த, 4ல், காடச்சநல்லுார் பஞ்., செயலாளர் நந்தகுமார், நண்பருடன் சேர்ந்து ஆள் வைத்து கடத்தி, ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டினர். பின் போலீசார் நெருங்குவதை அறிந்து, அவரை பாதிவழியில் இறக்கிவிட்டு தப்பினர். இந்த வழக்கில், காடச்சநல்லுார் பஞ்., செயலாளர் நந்தகுமார், 42; இவரது நண்பரான, ஈரோட்டை சேர்ந்த சிவா, 29, ஆகிய, இரண்டு பேரை, கடந்த, 7ல் கைது செய்தனர். இதையடுத்து, காடச்சநல்லுார் பஞ்., செயலாளர் நந்தகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணையில், பி.டி.ஓ.,வையும் சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில், ஓடப்பள்ளி பஞ்., செயலளராக பணிபுரியும் ராஜசேகர், கூடுதலாக, காடச்சநல்லுார் பஞ்., செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.