உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துாய்மையே சேவை திட்டம் சிறப்பான பணிக்கு பாராட்டு

துாய்மையே சேவை திட்டம் சிறப்பான பணிக்கு பாராட்டு

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியில், துாய்மையே சேவை திட்டத்தின் கீழ், கடந்த, 17 முதல், நேற்று முன்-தினம் வரை, துாய்மையை முதன்மைப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதை-யொட்டி சிறந்த முறையில் பணியாற்றியவர்க-ளுக்கு பாராட்டு விழா, மாநகராட்சியில் நடந்தது.மாநகராட்சி மேயர் கலாநிதி தலைமை வகித்தார். கமிஷனர் மகேஸ்வரி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மாநகராட்சி பகுதியில் துாய்மை பணியை சிறப்-பாக மேற்கொண்ட அலுவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களை பாராட்டி பரிசு வழங்-கப்பட்டது.மேலும், துாய்மையே சேவை திட்டத்திற்காக உதவிய சமூக சேவை அமைப்புகள், பள்ளி, கல்-லுாரி ஆசிரியர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மணவியரை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநக-ராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை