டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட்
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தவர் இமயவரம்பன். இவர், திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட சம்பவம் ஒன்றில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தார். விசாரணை, நாமக்கல் எஸ்.சி.,-எஸ்.டி., நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகி சாட்சி சொல்ல, அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார். அவர், தற்போது ராணிப்பேட்டையில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.