கொல்லிமலையில் 700 பேருக்கு கலைஞர் கனவு இல்லம்
சேந்தமங்கலம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. கொல்லிமலை வட்டார அட்மா குழு தலைவர் செந்தில் முருகன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அப்பன் ராஜ் வரவேற்றார். தாசில்தார் சித்ரா முன்னிலை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார் கலந்துகொண்டு, 120 பயனாளிகளுக்கு, 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 700 வீடுகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் காளியப்பன், பி.டி.ஓ., பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.