உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய மேம்பாலத்தில் பேரிகார்ட், எச்சரிக்கை பலகை அவசியம்

புதிய மேம்பாலத்தில் பேரிகார்ட், எச்சரிக்கை பலகை அவசியம்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் புதிய மேம்பாலத்தில், வாகனங்கள் சீராக செல்லும் வகையில் சென்டர் மீடியன் மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிப்பாளையம் ஆலாம்பாளையம் பகுதியில் இருந்து, ஒன்பதாம்படி வரை, 3 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு கடந்த மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மேம்பாலம் வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேம்பாலத்தில், வாகனங்கள் சீராக செல்லாமல், தாறுமாறாக செல்வதால் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவில் டூவீலரில் செல்லும் வயதானவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.எனவே மேம்பாலத்தில் வாகனங்கள் சீராக செல்ல, சாலையின் மையப்பகுதியில் சென்டர் மீடியன் மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை