நாமக்கல்லில் பொதுக்கூட்டம் பா.ஜ., தலைவர் பங்கேற்பு
நாமக்கல், நவ., 4ம் தேதி நாமக்கல்லில் நடைபெறும், பா.ஜ., பொதுக்கூட்டத்தில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகிறார்.தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நவ., 4ம் தேதி அவர் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அன்று மாலை 5:00 மணிக்கு, நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகிக்கிறார்.மத்திய இணை அமைச்சர் முருகன், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., செயலர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் சரோஜா, மாநில பா.ஜ., துணைத்தலைவர்கள் ராமலிங்கம், துரைசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் கூட்டத்தில் பேசுகின்றனர்.