மேலும் செய்திகள்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
26-Oct-2025
ப.வேலுார், ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம், நேற்று நடந்தது. பொத்தனுார் வேர்டு நிறுவன செயலாளர் சிவகாமவல்லி தலைமை வகித்தார். துணை செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார்.சேலம் பாவை மருத்துவமனை டாக்டர் பாவை, புற்றுநோய் அறிகுறிகள், புற்றுநோய் கண்டறியும் முறை, எவ்வாறு கையாள்வது, உணவு பழக்க வழக்கம் குறித்து பேசினார். தொடர்ந்து, சராசரியாக, 14 சதவீதம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, 30 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.பெண்கள் தங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்தி, ஏதேனும் கட்டிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
26-Oct-2025