உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அண்ணன் தலையில் கல்லை போட்டு கொலை; தம்பிக்கு வலை

அண்ணன் தலையில் கல்லை போட்டு கொலை; தம்பிக்கு வலை

கொல்லிமலை, கொல்லிமலையில், விவசாயி தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில், தலைமறைவாக உள்ள தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சேலுார் நாடு பள்ளக்குழிப்பட்டி அடுத்த குளிக்காடு டிரான்ஸ்பார்மர் அருகே, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக வாழவந்திநாடு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், இறந்து கிடந்த முதியவர் அதே பகுதியான பள்ளக் குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி காசாம்பு என்ற செல்வராஜ், 60, என்பதும், தலையில் கல்லை போட்டு மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர் என்றும் தெரியவந்தது.மேலும் இறந்த செல்வராஜ் தம்பி துரைசாமிக்கும், செல்வராஜூக்கும் இடையே நிலப்பிரச்னை இருப்பதாகவும் தெரியவந்தது. எனவே, அண்ணனை தம்பியே கொலை செய்திருக்கலாமா என போலீசார் சந்தேகமடைந்தனர். தம்பியை தேடி போலீசார் சென்ற போது அவர் வீட்டில் இல்லை. தலைமறைவானது அப்போதுதான் தெரிந்தது. இதனால், போலீசார் தலைமறைவான தம்பியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை