உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கைக்கு அழைப்பு

அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கைக்கு அழைப்பு

ராசிபுரம் :நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், நாமக்கல், கொல்லி மலை, சேந்தமங்கலத்தில், ஐ.டி.ஐ.,க்கள் செயல்பட்டு வருகின்றன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி, டிப்ளமோ பெற்ற மாணவ, மாணவியருக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. ஜூன், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். மாதம், 750 ரூபாய் உதவித்தொகையுடன் விலையில்லா மிதிவண்டி, பாடபுத்தகங்கள், சீருடை, காலணி, வரைபடக்கருவிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.இப்பயிற்சியில் சேர www.skilltraining.tn.gov.inஎன்ற ஆன்லைன் மூலமாகவும் அல்லது நாமக்கல் கொல்லிமலை மற்றும் சேந்தமங்கலம் அரசு ஐ.டி.ஐ.,-க்கு நேரில் வந்தும், 50 ரூபாய் செலுத்தி ஜூன், 13க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 04286-299597, 04286-267976, 9499055844 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி