மேலும் செய்திகள்
ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை மாணவர்களுக்கு அழைப்பு
23-May-2025
நாமக்கல், 'மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஐ.டி.ஐ.,யில் சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 2025-26ம் ஆண்டிற்கான, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர, www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்புவோர், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படங்களை கொண்டு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.குறைந்தபட்சம், 14 வயது பூர்த்தியடைந்தவருக்கும், அதிகபட்சம் ஆண்களுக்கு, 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்ப கட்டணம், 50 ரூபாய். விண்ணப்பிக்க, வரும், 13 கடைசி நாள். விபரங்களுக்கு, நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலையில் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அறை எண், 304-, 306, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திற்கு நேரில் வருகை தரலாம். மேலும், 9499055843, 9499055846, 04286--299597, -247472, 290297, 9500671416 ஆகிய தொலைபேசி, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23-May-2025