உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கஞ்சா விற்பனை: எருமப்பட்டி வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்

கஞ்சா விற்பனை: எருமப்பட்டி வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்

'நாமக்கல், நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி கைகாட்டியை சேர்ந்தவர் முகம்மது அப்துல் ரகுமான், 25. நாமக்கல் மற்றும் எருமப்பட்டி பகுதிகளில், பெற்றோர் அரவணைப்பில் இல்லாத மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி, மூளை சலவை செய்து, அவர்கள் மூலம் கஞ்சா விற்று வந்தார்.இவர் மீது, 8க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து கஞ்சா குற்றங்களில் ஈடுபட்டு வந்த முகம்மது அப்துல் ரகுமானை, நாமக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர், சமூக சீர்கேடு விளைவிக்கும் கஞ்சா குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தததால், நாமக்கல் எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., தனராசு ஆகியோர் முகம்மது அப்துல் ரகுமானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி, நாமக்கல் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.கலெக்டர் துர்கா மூர்த்தி, முகம்மது அப்துல் ரகுமானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது அப்துல் ரகுமானிடம், அதற்கான உத்தரவை போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை