கார் மோதி கம்பம் சேதம்
சேந்தை: ஈரோடு மாவட்டம், சின்ன சேமூரை சேர்ந்த, 4 பேர் ஒரு காரில், கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, அடிவாரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அடிவார செக் போஸ்ட் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், காரில் இருந்தவர்களை காயமின்றி பத்திரமாக மீட்டனர். மின் கம்பம் உடைந்து அருகில் இருந்த மரக்கிளையில் சாய்ந்தது. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.