உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நூலகம், அறிவுசார் மையத்தில் தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

நூலகம், அறிவுசார் மையத்தில் தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

நாமக்கல்: நாமக்கல் நகராட்சி நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தில், தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அறிவுசார் மையங்களில், மாவட்ட வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டுத்துறை மற்றும் மாவட்ட நுாலகத்துறை பங்களிப்புடன் துவக்கமாக, தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்க உள்ளது.அதில், 'போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான தாரக மந்திரம்' என்ற தலைப்பிலும், தொடர்ந்து ஏனைய அறிவுசார் மையங்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள 'போட்டித் தேர்வுகள் குறித்த பகுப்பாய்வு' என்ற தலைப்பிலும், 'சுடராய் ஒளிர்வோம்' என்ற தலைப்பிலும், சிறப்பு பேச்சாளர்களை கொண்டு சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள், மாவட்ட நிர்வாகத்தின் இது போன்ற முன்னெடுப்புகளை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, திருச்சி அண்ணா முன்னாள் பல்கலை நெறியாளர் சக்திவேல், நுண்கலை வல்லுனர் தமிழரசி ஆகியோர் தொழில் நெறி வழிகாட்டல் குறித்து பேசினர்.நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, திறன் மேம்பாடு உதவி இயக்குனர் பார்த்திபன், நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ