உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

சேந்தமங்கலம், கரூர் மாவட்டத்திலிருந்து கொல்லிமலையை சுற்றிப்பார்க்க, 7 பேர் சரக்கு வாகனத்தில் வந்தனர். நெரூர் பகுதியை சேர்ந்த டிரைவர் லோகநாதன் வாகனத்தை ஓட்டினார். நேற்று முன்தினம், கொல்லிமலை நம் அருவியில் அனைவரும் குளித்துவிட்டு மாசி பெரியசாமி கோவிலுக்கு செல்வதற்காக அங்குள்ள பனஞ்சாட்டுப்பட்டி கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில், 5 பேர் படுகாயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ