மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்
25-Oct-2024
ராசிபுரம்: ராசிபுரத்தில், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மாதம், 22ல் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, ஊரின் முக்கிய பிரமு-கர்கள் கையில் பூக்களுடன் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்று பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 24ல் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது.இன்று இரவு, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை இரவு, கொடியேற்று விழா நடக்கிறது. 7 அதிகாலை, 4:00 மணிக்கு தீமிதி நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9ல் சப்தாபரணத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழக்குழுவினர் செய்து வருகின்றனர்.
25-Oct-2024