உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எம்.பி., ராஜேஸ்குமாரை பாராட்டிய முதல்வர்

எம்.பி., ராஜேஸ்குமாரை பாராட்டிய முதல்வர்

எம்.பி., ராஜேஸ்குமாரை பாராட்டிய முதல்வர் நாமக்கல், அக். 23-''பார்த்தால் அமைதியாக இருக்கும் ராஜேஸ்குமார், செயலில் புயல் போல் இருப்பார்,'' என, முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.நாமக்கல் மாவட்டத்தில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 'புதுமைப்பெண்' திட்டத்தில், கல்லுாரி பயிலும் மாணவியர், 1,000 ரூபாய் உதவித்தொகை பெறுவதில், மாநிலத்திலேயே முதலிடம் நாமக்கல் மாவட்டம். 'தமிழ்ப்புதல்வன்' திட்டத்தில், கல்லுாரி பயிலும் மாணவர்களுக்கு, 1,000 ரூபாய் உதவித்தொகை பெறுவதில், இரண்டாவது மாவட்டமாக திகழ்கிறது. இந்த மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளில் அக்கறை கொண்டவர், எம்.பி., ராஜேஸ்குமார். நாமக்கல் மாவட்டத்திற்காக திட்டப்பணிகளை பெறுவதில் முனைப்பாக இருக்கக்கூடியவர். என்னை சந்திக்க வரும்போதெல்லாம், அவர் கையில் ஒரு கடிதம் நிச்சயமாக இருக்கும். பார்க்க அமைதியாகவும், செயலில் புயலாகவும் இருக்கும் தம்பி ராஜேஸ்குமார், நான் வளர்த்த இளைஞரணியின் தயாரிப்பு. நாமக்கல் கலெக்டர் உமா, சிறப்பாக பணியாற்றி வருவதை, தொடர்ந்து கவனித்து வருகிறேன். அலுவலகத்திலேயே உட்கார்ந்து நிர்வாகம் செய்யாமல், 'பீல்டு விசிட்' மூலமாக கண்காணிக்கும் கலெக்டராக அவர் இருக்கிறார். மற்ற மாவட்ட கலெக்டர்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை