ராசிபுரம் செல்வா டி.ஆர்.பி.,அகாடமியில் வகுப்பு துவக்கம்
ராசிபுரம், டிச. 15-ராசிபுரத்தில், செல்வா டி.ஆர்.பி., அகாடமி செயல்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த, டி.ஆர்.பி.,யில் அனுபவமிக்க கல்லுாரி பேராசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இங்கு பயின்றவர்கள் பலர், அரசு ஆசிரியர்களாக உள்ளனர். கடந்த செப்., 2019 தேர்வில் படித்த, 10 பேர் அரசு பணிக்கு சென்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட, 10 பேரில் மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள முத்தமிழ் பள்ளியில் நடைபெறுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் நேரடி வகுப்புகளும் நடைபெறுகிறது. தொடர்புக்கு, 9443940577, 883823533 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அதன் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.