மேலும் செய்திகள்
விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
05-Nov-2025
ப.வேலுார், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடக்கிறது. கடந்த வாரம் நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 70.60 ரூபாய், குறைந்தபட்சம், 55.79 ரூபாய், சராசரி, 65.99 ரூபாய் என, 3.64 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 81.86 ரூபாய், குறைந்தபட்சம், 56.39 ரூபாய், சராசரி, 70.70 ரூபாய் என, 5.38 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் தேங்காய் விலை உயர்ந்தே விற்பனை செய்யப்பட்டது.
05-Nov-2025