மேலும் செய்திகள்
விபத்தில் டூ - வீலரில் சென்றவர் பலி
04-Feb-2025
ராசிபுரம்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஓலப்பட்டியை சேர்ந்தவர் ரவி மகன் விஷ்ணு, 19; இவர், பாச்சல் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். பகுதி நேரமாக, ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை, நண்பரின் பைக்கை வாங்கிக்கொண்டு கவுண்டம்பாளையம் பகுதிக்கு சென்றார். அங்கு, நின்றிருந்த லாரியின் பின்னால் மோதினார். இதில், பலத்த காயமடைந்த விஷ்ணுவை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விஷ்ணு உயிரிழந்தார். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Feb-2025