உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் அருகே விபத்து கல்லுாரி மாணவர் பலி

ராசிபுரம் அருகே விபத்து கல்லுாரி மாணவர் பலி

ராசிபுரம்:சேலம், ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் பிரேம்குமார், 19; ராசிபுரம் அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், மூன்றாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, கல்லுாரி முடிந்து, நண்பரான சேலம், எருமாபாளையம் பகுதியை சேர்ந்த ராஜ் மகன் ராகேஷ், 19, என்பவருடன், 'கே.டி.எம்.,' பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அதே கல்லுாரியில், இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் மிதுன், 19, நடராஜன், 18, ஆகிய இருவரும், 'ராயல் என்பீல்டு' வண்டியில் பின் தொடர்ந்து சென்றனர். ஆண்டகளூர்கேட் அருகே சென்றுகொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற பஸ் திடீரென வேகத்தை குறைத்ததால், பிரேம்குமார், தன் வண்டியை இடது பக்கம் திருப்பியுள்ளார். அப்போது, பின்னால் வந்துகொண்டிருந்த மிதுன், பிரேம்குமார் பைக் மீது மோதினார். நால்வரில், ஒருவர் மட்டுமே தலைக்கவசம் அணிந்துள்ளார்.இதில், நான்கு மாணவர்களும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், நால்வரையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பிரேம்குமாரை, மேல் சிகிச்சைக்காக, சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை