நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் வினியோகிக்கும் வகையில், 1,629 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டு, கடந்த, 4 முதல், தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பணியில் தன்னார்வலர்களும் பங்கேற்று சிறப்பாக செய்து வருகின்றனர். அதன்படி, 1,629 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களில், ராசிபுரம்(தனி) சட்டசபை தொகுதியில், வி.ஏ.ஓ., கோபாலகிருஷ்ணன், சத்துணவு திட்ட பணியாளர் ஜெயந்தீஸ்வரி.நாமக்கல்லில், கிராம உதவியாளர்கள் பழனிவேல், பெருமாள் ராஜ், அங்கன்வாடி பணியாளர்கள் லட்சுமி, சுதா, வீனா, வி.ஏ.ஓ., விஜயஸ்ரீ, ப.வேலுாரில், அங்கன்வாடி பணியாளர் சசிகலா என, 9 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, 100 சதவீதம் எட்டி உள்ளனர். இதையடுத்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்காமூர்த்தி, 9 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை பாராட்டி, சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார். 'நாமக்கல் மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுதிகளிலும், மீதமுள்ள அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களும், எஸ்.ஐ. ஆர்., படிவங்களை, 100 சதவீதம் வினியோகித்து, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று, பி.எல்.ஓ., ஆப்பில் பதிவேற்றம் செய்து, விரைவில் இப்பணியை முடிக்க வேண்டும்' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.