உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நேரு நினைவு நாள் காங்., அனுசரிப்பு

நேரு நினைவு நாள் காங்., அனுசரிப்பு

நாமக்கல் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின், 61வது நினைவு நாளை, நாடு முழுவதும் நேற்று காங்., கட்சியினர் அனுசரித்தனர்.நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், நாமக்கல் நேரு பூங்காவில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், மாநகர தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, நேரு சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிர்வாகிகள் சாந்திமணி, செல்வம், சரவணன், ஜபூருல்லா, முருகன், மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை