உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்., கட்சியுடன் தொகுதி பங்கீடு எதற்கு: சீமான்

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்., கட்சியுடன் தொகுதி பங்கீடு எதற்கு: சீமான்

நாமக்கல் : ''தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பங்கீடு தர மறுக்கும், கர்நாடகா காங்., கட்சியுடன், தி.மு.க., எதற்கு தொகுதி பங்கீடு வைத்துள்ளனர்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். நாமக்கல் லோக்சபா தொகுதி நா.த.க., வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாமக்கல்லில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது, அவர் பேசியதாவது: சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கச்சத்தீவை மீட்பேன் என கூறுவது தேர்தல் பாசம் தான். தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பங்கீடு தர மறுக்கும், கர்நாடகா காங்., கட்சியுடன் தி.மு.க., தொகுதி பங்கீடு எதற்கு வைத்துள்ளது. வீரப்பன் இருந்திருந்தால் தண்ணீர் கிடைத்திருக்கும். உழைக்கும் மக்களின் பிரச்னைகளை நாங்கள் தீர்க்க வந்துள்ளோம். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளை, லோக்சபாவில் ஓங்கி ஒலிக்க செய்வார். கருணாநிதியின் மகள் கனிமொழியா, சீமானின் தங்கை கனிமொழியா என, பார்த்து நீங்கள் ஓட்டுப்போட வேண்டும்.இவ்வாறு பேசினார். பின்னர் ராசிபுரம், ப.வேலுாரில் சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை