மேலும் செய்திகள்
மினி பஸ் இயக்க நாளைக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
30-Jan-2025
நாமக்கல்: மின் பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.தமிழகத்தில் மினி பஸ்களுக்கான கட்டண திருத்தம், வரும், மே 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.மேலும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களுடன், நாமக்கல் மாவட்டத்தில், மினி பஸ்கள் புதிய விரிவான திட்டத்தில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், புதிய மினி பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.தனியார் அமைப்புகள், மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், பஸ் உரிமையாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பங்கேற்றனர்.தனித்துணை கலெக்டர் பிரபாகரன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
30-Jan-2025