உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / யுவராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மே 12க்கு ஒத்திவைப்பு

யுவராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மே 12க்கு ஒத்திவைப்பு

நாமக்கல்:சேலம் மாவட்டம், ஓமலுாரை சேர்ந்தவர் கோகுல்ராஜ், 23; இன்ஜி., பட்டதாரி. இவர், 2015 ஜூனில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, நாமக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசார், தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட, 17 பேரை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணைக்காக யுவராஜை போலீசார், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகனுக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக, யுவராஜ் மீது நீதிமன்றம் தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து போலீசார் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜை, நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் நந்தினி, வழக்கு விசாரணையை மே, 12க்கு ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை