விளைச்சல் குறைவால் அரளி விலை உயர்வு
சேந்தமங்கலம், நவ. 30-நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை அடிவாரமான காரவள்ளி, சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரளி பூ சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இங்கு விளையும் பூக்களை, நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஏலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.தற்போது பனிப்பொழிவு அதிகம் இருப்பதால், அரளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கும் வரத்து குறைந்தது. கடந்த வாரம் வரை, ஒருகிலோ அரளி, 250 ரூபாய்க்கு விற்ற நிலையில், கடந்த, 3 நாட்களாக கிலோ, 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.