கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு
எருமப்பட்டி: எருமப்பட்டி, போடிநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் குமார், 45; விவசாயி. இவர், நான்கு பசுமாடு காளைகளை வளர்த்து வரு-கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, பசுமாடு ஒன்று அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. அதிகாலை எழுந்த குமார், பசுமாட்டை பார்த்தபோது காணவில்லை. பின், அருகில் தேடி-யபோது கிணற்றில் தவிறி விழுந்த பசுமாடு தத்தளித்துக்கொண்டி-ருந்தது. இதையடுத்து, கிரேன் இயந்திரம் மூலம் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.