ரூ.2.50 கோடிக்கு மாடுகள் வர்த்தகம்
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி உள் ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஈரோட்டில் இடைத்தேர்தல் நடப்பதால், அங்கு நடக்கும் மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகள் செல்லாமல் புதன்சந்தை மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வாங்கி செல்ல குவிந்தனர். இதனால், நேற்று நடந்த மாட்டுச்சந்தையில், 2.50 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.