மேலும் செய்திகள்
கடை வீதிகள் விழாக்கோலம்
29-Sep-2025
நாமகிரிப்பேட்டை, ஐப்பசி மாதம் அமாவாசையில் தான் பெரும்பாலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். இதனால், தீபாவளியில் பெரும்பாலும் ஹிந்துக்கள், அசைவம் சமைப்பதை தவிர்த்து விடுவர். ஆனால், இந்தாண்டு தீபாவளிக்கு மறுநாள் தான் அமாவாசை வருகிறது. இதனால், அசைவ பிரியர்கள் தீபாவளியை உற்சாகத்துடன், நேற்று கொண்டாடினர். காலை முதல் கோழிக்கடை, மீன் உள்ளிட்ட மாமிச கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.முக்கியமாக, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்.,ல் அரியாகவுண்டம்பட்டி ரோட்டில் தான் அனைத்து வித கறிக்கடை, காய்கறி கடைகள் உள்ளன. இதில், நேற்று காலை முதல் மதியம் வரை கூட்டம் அலைமோதியது. அதுமட்டுமின்றி காலை, 9:00 மணியளவில் கடைகளுக்கு வந்த பொதுமக்களால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு பின், போக்குவரத்து சீரானது.அதேபோல், ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் பண்டிகை, தீபாவளியை ஒட்டியே வரும். இதனால் கோவிலுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள், தீபாவளியில் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஆனால், இந்தாண்டு இன்று தான் கோவில் விழாவுக்கு பூச்சாட்டுகின்றனர். இதனால், ராசிபுரத்திலும், கறிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
29-Sep-2025