உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சூறாவளி காற்றால் 2,000 வாழை மரங்கள் சேதம் புளியம்பட்டி அருகே விவசாயிகள் சோகம்

சூறாவளி காற்றால் 2,000 வாழை மரங்கள் சேதம் புளியம்பட்டி அருகே விவசாயிகள் சோகம்

பு.புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி அருகே சூறாவளி காற்றால், 2,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. பணையம்பள்ளி, தேசிபாளையம் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நேந்திரன், குவின்டால் நேந்திரன் உள்ளிட்ட, 2,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாருடன் அடியோடு முறிந்து விழுந்தன. ராஜப்பன் தோட்டத்தில், ௧,000 வாழை மரங்கள், ரவி தோட்டத்தில், 300 வாழை மரங்கள் என, 2,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்ததால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி