மலைக்கோட்டை குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
நாமக்கல், நாமக்கல் நகரின் மைய பகுதியில், மலைக்கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டையில், வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் தர்கா உள்ளன. கோட்டையின் நுழைவு வாயில் அருகே குளம் உள்ளது. இந்த குளம் பாறை மீது அமைந்துள்ளதால், எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும்.மழைக்காலங்களில் அதிகளவிலும், கோடை காலங்களில் குறைந்த அளவிலும் தண்ணீர் இருக்கும். இதில் ஏராளமான மீன்கள் உள்ளன. இவற்றில் சில மீன்கள், நேற்று திடீரென செத்து மிதந்தன. இதனால் மீன்களுக்கு இரை போட சென்ற பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அவர்களில் சிலர் செத்த மீன்களை சேகரித்து அப்புறப்படுத்தினர். மீன்கள் இறந்ததற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. விசாரணையில், தண்ணீர் குறைவாக உள்ளதாலும், வெப்பம் காரணமாக மீன்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.