மேலும் செய்திகள்
தி.மு.க.,செயற்குழு கூட்டம்
18-Nov-2024
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்100 இடங்களில் கொண்டாட தீர்மானம்நாமக்கல், நவ. 24-கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில், நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பேசினார். கூட்டத்தில், துணை முதல்வரும், தி.மு.க., இளைஞரணி செயலாளருமான உதயநிதியின் பிறந்த நாளை, கிழக்கு மாவட்டம் முழுவதும், 100 இடங்களில் கொாண்டாட வேண்டும். ஒன்றிய, நகர, டவுன் பஞ்.,களில் உள்ள கட்சி கொடிகம்பங்களில், கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டும். ஒன்றியம், நகரங்களில், நான்கும், டவுன் பஞ்., பகுதிகளில் மூன்று என, நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் உணவு வழங்குதல், மூத்த முன்னோடிகள், 25 பேருக்கு, பொற்கிழி, வேட்டி, சேலை வழங்குதல், குறைந்தது, 25 முதல், 50 மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சட்டசபை தொகுதி பார்வையாளர்கள் முனவர் ஜான், நன்னீயூர் ராஜேந்திரன், மாநகராட்சி துணை மேயர் பூபதி, மேற்கு, தெற்கு மாநகர செயாலாளர்கள் சிவக்குமார், ராணா ஆனந்த், மாவட்ட, நகர, ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
18-Nov-2024