புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நைனாமலையில் குவிந்த பக்தர்கள்
சேந்தமங்கலம்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையொட்டி, நைனா-மலை வருதராஜ பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.சேந்தமங்கலம் அருகே, நைனாமலையில் பிரசித்தி பெற்ற வரு-தராஜ பெருமாள் கோவில் உள்ளது. சின்ன திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமை நாளில் விரதம் இருப்பதற்காக, பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். கோவில் மலை உச்சியில் உள்ள வருதராஜ பெருமாளை தரிசனம் செய்வதற்காக, 3,600 படிக்கட்டு-களில் ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.இந்நிலையில், நேற்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழ-மையையொட்டி, முதல் நாளான வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி முதல் பக்தர்கள் நைனாமலைக்கு வர துவங்கினர். இரவு முழுவதும் கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல், நேற்று வரை, 20 ஆயிரம் பேர் மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்-தனர்.மலை அடிவாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயரை, 50 ஆயிரத்-திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரி-சனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் கீர்த்தனா செய்திருந்தார்.* மோகனுாரில், கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சுவாமி, பத்மாவதி தாயார் சமேதராக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். நேற்று புரட்-டாசி சனிவார பெருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அபி ேஷக, ஆராதனை நடந்தது. பின் சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.* மோகனுார் தாலுகா, பெரமாண்டம்பாளையம் கிராமத்தில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரத-ராஜ பெருமாள் கோவிலில், அபி ேஷகம், ஆராதனை நடந்தது. சுவாமி, தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா-லித்தார்.* மோகனுார் அடுத்த, ஏ.மேட்டுப்பட்டியில் பட்டாபிராமர் கோவிலில் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. சீதை, லட்சுமணர் சுவாமி சமேதராக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.* மல்லசமுத்திரம் அருகே, கூத்தகவுண்டம்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் வெள்ளை பெருமாள் கோவிலில், வையப்பமலைபுதுார் புடவைக்காரியம்மன், வீர-காரன் கோவில் பங்காளிகள் சார்பாக, அபி ேஷக அலங்காரம் செய்யப்பட்டு திருக்கோடி ஏற்றப்பட்டது.அதேபோல், மல்லசமுத்திரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழக சவுந்தரராஜபெருமாள் கோவிலில் நடந்த புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டில், சுவாமி திருவேங்க-டபதி ஸ்ரீனிவாசபெருமாள் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி-யளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்க-ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.