சீட்டு பணம் ஏமாற்றினரா? தம்பதியர் மீது புகார்
குமாரபாளையம்: ஈரோடு மாவட்டம், பவானி, கண்ணாரா வீதியை சேர்ந்தவர் மாரியம்மாள், 55. இவர் குமாரபாளையம் பூலக்காடு பகுதியை சேர்ந்த குப்புராஜ், 34, சங்கீதா, 28, ஆகிய தம்பதியரிடம் இரண்டு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு போட்டார். ஏலம் எடுத்த தொகை, ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை, இதுவரை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. பலமுறை கேட்டும் தராததால், குமாரபாளையம் போலீசில் மாரியம்மாள் புகார் செய்துள்ளார்.