மேலும் செய்திகள்
மனைவியை குத்திய கணவன் கைது
21-Nov-2024
சேந்தமங்கலம்: ராசிபுரம், ஏ.டி.சி., டிப்போ பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 30; மாற்றுத்திறனாளி. இவர், சேந்தமங்கலம் அருகே, சாலையூரில் அக்கா வீட்டில் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம், பெரியாண்டவர் கோவில் அருகே உள்ள கைவிடப்பட்ட அரசு கல் குவாரியில் தேங்கியுள்ள மழைநீரில், மணிகண்டன் குளிக்க சென்றுள்ளார். அப்போது, கால் தவறி கல் குவாரி குட்டையில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்-துள்ளார். நேற்று காலை, அந்த வழியாக சென்ற பொட்டணத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் பார்த்து, சேந்தமங்கலம் போலீ-சாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற போலீசார், மணி-கண்டன் உடலை மீட்டு விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகு-தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
21-Nov-2024