தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருள் வழங்கல்
ப.வேலுார்:ப.வேலுார், சுல்தான்பேட்டையில், கூட்டுறவுத்துறை தாயுமா-னவர் திட்டத்தின் கீழ் குடிமைப்பொருட்கள் நேற்று, வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டது.அப்பகுதியில் உள்ள, மூன்று ரேஷன் கடைகள் சார்பாக, 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நலன் கருதி, அவர்களது வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்-களை வினியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவர் திட்-டத்தின் கீழ், நேற்று குடிமைப்பொருட்கள் வழங்கப்பட்டன.தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும், 2வது வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமையில் இவர்களது வீட்டிற்கே சென்று குடிமைப்-பொருட்கள் வழங்கப்படும், என தெரிவித்தனர். இப்பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் முருகன், விமலா, சரோஜாதேவி மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.