உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருச்செங்கோட்டில் மாவட்ட கபடி போட்டி

திருச்செங்கோட்டில் மாவட்ட கபடி போட்டி

திருச்செங்கோடு, மாவட்ட அளவில், 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் கபடி போட்டி, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற திருச்செங்கோடு, குமாரபாளையம், மல்லசமுத்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், மோகனுார், நாமக்கல், பரமத்தி வேலுார் ஆகிய, எட்டு மண்டலங்களை சேர்ந்த ஆண்கள் கபடி அணிகள் விளையாடின. 'நாக் அவுட்' முறையில் நடந்த போட்டிகளை, திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு துவக்கி வைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி, உடற்கல்வி இயக்குனர் தீபா, உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்தி, உமா சந்தர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். எட்டு அணிகள் விளையாடும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணி, மாநில போட்டிகளில் விளையாட உள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை