சேந்தமங்கலம் அரசு மகளிர் பள்ளிக்கு நன்கொடை வழங்கல்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கு, கல்வி மேம்பாட்டு நிதியாக, இரண்டு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், முதல் தவணையான ஒரு லட்சம் ரூபாயை, தமிழக பள்ளிக்கல்வி அலுவலர்கள், பணி நிறைவு அமைப்பு சென்னை சார்பில், பாக அமைப்பின் பொதுச்செயலாளர் மாரியப்பன், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணகுமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவரஞ்சனி மற்றும் பலர் கலந்துகொண்னர்.அரசு பள்ளி மாணவிகளுக்குவிருது வழங்கி பாராட்டுபள்ளிப்பாளையம், செப். 4பள்ளிப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், தமிழ் சிந்தனை பேரவையின் தமிழ்ச்சுடர் விருது வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் அமுதா வரவேற்றார். விழாவில், 2025ம் ஆண்டு அரசு பொது தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு, தமிழ் சிந்தனை பேரவையின் தலைவர் தமிழறிஞர் ரமேஷ்குமார், விருது வழங்கி பாராட்டினார். 'தனி தமிழை தயக்கமின்றி பேசுவோம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி, மாணவியருடன் கலந்துரையாடினார்.