இன்று கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு: மா.செயலர் அழைப்பு
நாமக்கல்: 'இன்று, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடக்கிறது' என, மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில், இன்று மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், வரும், 11ல், எஸ்.ஐ.ஆர்.,ஐ கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்தும், கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள், தலைமை மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்-றிய, நகர, டவுன் பஞ்., செயலாளர்கள், பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்-பாளர்கள், தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.