உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எலச்சிபாளையம் பி.டி.ஓ., ஆபீசில் பதிவேடுகளை பராமரித்தல் பயிற்சி

எலச்சிபாளையம் பி.டி.ஓ., ஆபீசில் பதிவேடுகளை பராமரித்தல் பயிற்சி

எலச்சிபாளையம் பி.டி.ஓ., ஆபீசில்பதிவேடுகளை பராமரித்தல் பயிற்சிஎலச்சிபாளையம், செப். 28-எலச்சிபாளையம் பி.டி.ஓ., அலுவலகத்தில், பதிவேடுகளை முறையாக பராமரித்தல், புதுப்பித்தல் பணிகளை கண்காணிப்பது குறித்து பயிற்சி முகாம் நடந்தது.எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று, பி.டி.ஓ., லோகமணிகண்டன் தலைமையில், மகாத்மா காந்தி தேசிய ஊரசு வேலை உறுதித்திட்டத்தின் கீழ், அனைத்து ஊராட்சிகளிலும், 1-7 பதிவேடுகள் முறையாக பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை கண்காணிப்பது தொடர்பாக பயிற்சி முகாம் நடந்தது.இதில், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், பணி ஒருங்கிணைப்பாளர்கள், பணி இணையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், பணி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணி இணையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை