உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தாயுமானவர் திட்டத்தால் முதியவர்கள் மகிழ்ச்சி

தாயுமானவர் திட்டத்தால் முதியவர்கள் மகிழ்ச்சி

எருமப்பட்டி, பவித்திரம் அருகே, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின்படி, வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள்கள் வழங்கியதால் முதியவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.எருமப்பட்டி யூனியன், பவித்திரம் பாரதி நகரில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, 20க்கும் மேற்பட்ட முதியவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க, 2 கி.மீ., துாரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவைகளை வாங்கிய பின், வீடுகளுக்கு சிரமப்பட்டு சென்று வந்தனர்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின், மூத்த குடி மக்களுக்காக தாயுமானவர் திட்டத்தின்படி வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். இதன்படி, நேற்று பவித்திரத்தில் உள்ள பாரதி நகர் ரேஷன் கடை பணியாளர்கள் முதியவர்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று, ரேஷன் பொருட்களை வினியோகம் செய்தனர். இதனால், முதியவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை