மல்லசமுத்திரத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் மகேந்திரா கல்லுாரி அமைந்துள்ளது. இக்கல்லுாரியில், இன்று காலை, 9:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 8ம் வகுப்பு முதல் பட்டப்ப-டிப்பு வரையிலும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், பொறியியல் படித்-தவர்கள் கலந்துகொள்ளலாம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிக-ளுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.